Tamilnadu
போதையில் கடை முன் வாந்தி எடுத்த வழக்கறிஞர்கள்.. தட்டி கேட்ட ஊழியர்களுக்கு அடி.. கைது செய்த காவல்துறை !
சென்னை இராயபுரத்தில் ஓய்வுபெற்ற Customs Superintendent ஒருவரின் மகள் தனியார் பாஸ்ட் புட் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த உணவகத்தின் அருகே உள்ள பானிபூரி கடையில் நேற்று இரவு குடித்து விட்டு மர்ம நபர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தபோது, இந்த பாஸ்ட் புட் கடையின் முன் வாந்தி எடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அவர்களோ உடனே தங்களது நண்பர்களை வரவழைத்து கடை ஊழியர், உரிமையாளரை கடையில் இருந்த கத்தி, இரும்பு ராடுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து உரிமையாளர் இராயபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்தவர்கள், தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதனை கண்ட அந்த கடை ஊழியர் ஒருவர், மது போதையில் இருந்தவர்களிடம் சற்று தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்தவர்கள், ஆபாசமாக திட்டியதுடன் 'நாங்கள் யார் தெரியுமா?' என்று கூறி தாக்கியுள்ளனர். இதனால் தகராறு ஏற்படும் என்பதால் கடை உரிமையாளரும் அந்த இடத்திற்கு வந்து போதையில் இருந்தவர்களை தட்டி கேட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், முதலில் தகராறு செய்தவர்கள் உட்பட வந்தவர்கள் அனைவரும் வழக்கறிஞர்கள் என தெரியவந்தது. இதனிடையே தாக்குதலால் காயமடைந்தவர்கள் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஓய்வுபெற்ற Customs Superintendent தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு 16 தையல்கள் போட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மதுபோதையில் உணவகத்தில் தகராறு செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!