Tamilnadu
“அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெகிழ்கிறேன்” : நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் வசித்து வருபவர் தமிழ் இலக்கியவாதியம் பிரபல பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் இவருக்கு வயது 78 தமிழ்நாடு முக்கிய தலைவர்கள் ஆளுமைகள் பிரபலங்களுடன் நெருங்கி பழகி நட்பாய் இருந்தவர்.
முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கலைஞர், ஜெயலலிதா, உள்ளிட்டோருடன் நட்பாக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி கே.வி.தங்கபாலு ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தவர் 1992 ஆம் ஆண்டு ராஜசபா உறுப்பினர் தேர்தலின் போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்தார். தனியா தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டவர். 78 வயதானாலும் இவரது பேச்சாற்றலும் நினைவாற்றலும் இலக்கிய நயமும் சிறப்பாக இருக்கும். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதி, காதல் செய்யாதவர்கள் கல்லறியுங்கள், திக்கணைத்தும் சடைவீசி, பழம் பாடல் புதுக்கவிதை உள்ளிட்ட புத்தகங்கள் கட்டுரைகள் ஆகியவை இவரால் உருவாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா - இலக்கிய துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை கண்ணன் மறைவையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள், விழா மேடையிலேயே, என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன்.
‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!