Tamilnadu
“ஆதிக்கம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு திருமாவளவன் பிறப்பார்”: பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு #HBDThiruma
Exclusivity என ஒரு விஷயம் உண்டு. 'நீ வேறு நான் வேறு' என சொல்லும் விஷயம். உலகம் முழுக்க மதம், இனம், வர்க்கம் என பல exclusive காரணிகளை கொண்டு அதிகாரம் தனக்கு சாதகமான வேலைகளை செய்கிறது.
Exclusivity-யை கொண்டு மிக எளிமையாக வெறுப்பை விதைக்க முடியும். பிரச்சினைகள் மூட்ட முடியும். ஹிட்லர் ஒரு சிறந்த உதாரணம்.
இந்தியாவில் மட்டும் exclusivity-க்கு ஒரு சிறப்பு தகுதி இருக்கிறது. பிறரை பிரித்து பார்க்கும் பேதவுணர்ச்சி இங்குதான் பண்பாடாகவே போற்றப்படுகிறது. Exclusivity-யை நிலைநிறுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு ஒரு பண்பாடே இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
'விலக்கி' பார்க்கும் பண்பாட்டை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போராட்டங்கள் மட்டுமே இந்திய அரசியலின் வரலாற்றில் முக்கிய மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன. அவையே இங்கு ஜனநாயகமாக, சமத்துவமாக, நீதியாக மலர்ந்திருக்கின்றன.
Exclusivity என்கிற, பரிணாமத்துக்கு எதிரான, இயற்கைக்கு புறம்பான தன்மையை எதிர்த்து காலந்தோறும் பல தலைவர்கள் இந்தியச் சூழலில் உருவாகியிருக்கின்றனர். அந்த வரிசையில் நம்முடன் இன்று இருக்கும் தலைவர்தான் தோழர் திருமாவளவன்.
ஒரு மேடைப் பேச்சில் தோழர் திருமாவுக்கு ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது.
'பட்டியல் சாதி பிரச்சினைகளே கையாள அதிகம் இருக்கிறபோது தமிழ், காவிரி போன்ற பொதுப் பிரச்சினைகளுக்கும் நீங்கள் முன் நிற்பது எதனால்?'
தோழரின் பதில்:
"என்னை எல்லா இடங்களிலும் புறக்கணிக்கும் மனிதனுடன் இணைந்து பணியாற்றும் வெளியை நான் தேடுகிறேன். அத்தகைய வெளிகள் உருவாகும்போது முதல் ஆளாக நான் அங்கு சென்று நிற்கிறேன். என்னை விலக்கி வைப்பதுதான் உன்னுடைய அரசியல் என்றால் உன்னுடன் இணைவதுதான் என்னுடைய அரசியல்.
மேலும் தமிழ், காவிரி போன்றவை பொது அடையாளமென பார்க்கப்பட்டாலும் அப்பிரச்சினைகள் ஓர் ஆதிக்க உணர்வால் விளைந்தவை. ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் எங்கு முன்னெடுக்கப்பட்டாலும் அங்கு நானும் நிற்பேன்"
Exclusivity என்பது uniformity என்கிற புதுப்பெயரில் போதிக்கப்படுவதை இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒற்றைத் தன்மை என்பதே விலக்கும் தன்மைதான். விலக்கும் தன்மையில் பிறந்த இந்திய பண்பாட்டை கேள்விக்குட்படுத்தாமல் எந்த விடுதலையும் சாத்தியமில்லை என்கிற சமூகத்தில்தான் தோழர் திருமாவின் முக்கியத்துவம் அதிகமாக தெரிகிறது.
நான் ஆண் நீ பெண், நான் பணக்காரன் நீ ஏழை, நான் முதலாளி நீ தொழிலாளி, நான் இந்தியா நீ தமிழ்நாடு, நான் இந்தி நீ தமிழ், நான் சிங்களன் நீ தமிழன், நான் ஆத்திகன் நீ ஆத்திகன், நான் பார்ப்பனன் நீ சூத்திரன், நான் ஆண்டசாதி நீ கீழ்சாதி என பேசப்படும் எல்லா binary உரையாடல்களுக்கும் அடிநாதமாக இருப்பது அடிப்படைவாதமும் பாசிசமும் மட்டும்தான்.
எங்கெல்லாம் 'நான்' என்கிற ஆதிக்க உணர்வு பிறக்கிறதோ அங்கெல்லாம் சமத்துவம் பேசும் திருமாவளவன் பிறப்பார். அதுவே இயற்கையின் நியதி; நீதி!
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தோழர்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!