Tamilnadu
கோயில் பூட்டை உடைத்த பாஜக துணைத்தலைவர்.. வீடு தேடி அதிரடியாக கைது செய்த தமிழ்நாடு போலிஸ் !
நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சி சார்பாக பேரணி நடத்தி வந்தனர். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில், பா.ஜ.க சார்பில் அமுதப்பெருவிழா பாத யாத்திரை நடைபெற்றது.
பா.ஜ.க மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் துவக்கி வைத்த இந்த பேரணியில், பா.ஜ.க ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது, பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவக்கப்பட்டு தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் வரை நடைபெற்றது.
அப்போது சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் உள்ள பாரதமாதா கோயிலில் மாலை அணிவிக்க பா.ஜ.வி-னர் முயன்றனர். ஆனால் அந்த கோயிலோ பூட்டு போட்டு போடப்பட்டிருந்தது. இதையடுத்து பா.ஜ.க-வினர் கதவை திறக்கும்படி அங்கிருக்கும் பணியாளரிடம் கேட்டுள்ளார்.
ஆனால், பணியாளரோ, அதிகாரி அனுமதியின்றி திறக்கமுடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் அருகில் இருந்த கல்லை எடுத்து அந்த பூட்டை உடைத்துள்ளார். பின்னர் பா.ஜ.க-வினர் உள்ளே சென்று மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், அத்துமீறி பாரத மாதாவின் கோயில் பூட்டை உடைத்ததாக கே.பி.ராமலிங்கம் மீது புகார் எழுந்ததையடுத்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை ராசிபுரம் காவல்துறையினர் உதவியுடன் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?