Tamilnadu

"மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு ஆட்சி நடத்தும் பா.ஜ.க": CPI டி.ராஜா கடும் தாக்கு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள சந்திராபுரம் பகுதியில் நடைபெற்றது. இதனை அடுத்து மாநாட்டின் இறுதி நிகழ்வாகப் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா கலந்து கொண்டு பேசுகையில், ஒரே நாடு , ஒரே கலாச்சாரம் , ஒரே மொழி , ஒரே வரி என ஒற்றை நாடாக மாற்ற பா.ஜ.க முயல்கிறது. பா.ஜ.க ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துவதாகவும் , நாடு ஒன்றுபடவேண்டுமானால் பா.ஜ.க-வின் கருத்து எதிர்க்கப்படவேண்டும்.

மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேன்டும்.இது வரலாற்றுத் தேவை. பா.ஜ.க-வை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகள் , இடதுசாரிகள் ஒன்றுபட வேன்டும்.

பா.ஜ.க மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துகிறது. ஜனநாயகம். நாட்டை காப்பாற்ற பாஜக அகற்றப்படவேண்டும் . அதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு முன்வர வேண்டும். அதிகார பலம் பணம் பலம் வைத்து பா.ஜ.க தமிழகத்தில் காலுண்ற நினைக்கிறது. இதனை மக்களுக்காக உள்ள கட்சிகள் , ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: பீகாரில் அடித்துக்கொண்டு பிரிந்த பா.ஜ.க கூட்டணி - எதிரிகளை நண்பனாக்கி கொள்ள நிதிஷ்குமார் முடிவு !