Tamilnadu

சினிமா பாடலை மாற்றாததால் ஆத்திரம்.. பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய கும்பல்.. நாகையில் பரபரப்பு !

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆய்மழை என்ற கிராமத்திற்கு மினி பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்தில் திரைப்படப்பாடல் போடுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை பயணிகளின் சென்றுகொண்டிருந்த பேருந்தில், பாடல் ஒலித்துள்ளது.

அப்போது அந்த பேருந்தில் பயணித்த ஓட்டுநர் ஒருவர், ஒலித்த பாடல் தனக்கு பிடிக்கவில்லை என்றும், வேறு பாட்டை போடுமாறும் கேட்டுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநரும், நடத்துநரும் பாடலை மறுப்பு தெரிவித்து மாற்றவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பேருந்தை நிறுத்த சொல்லி கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பேருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விட்டது. இருப்பினும் தான் கூறியும் பாடலை மாற்றவில்லை என்பதால் அந்த நபர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், போன பேருந்து அதே வழியில் திரும்ப வந்த போது, அந்த நபர் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு பேருந்தை வழி மறித்துள்ளார். மேலும் அந்த ஓட்டுநர், நடத்துநரை வசைபாடி அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தை அங்குள்ள நபர்கள் வீடியோவாக வெளியிட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "ஏனென்றால் உன் பிறந்தநாள்.." - 80 வயது மூதாட்டிக்கு 80 வகையான சாப்பாடு.. நெகிழ வைத்த குடும்பத்தினர் !