Tamilnadu
அமைச்சர் அன்பில் மகேஸ் குறித்து பொய்செய்தி பரப்பும் சங்கி கும்பல்.. விளக்கமளித்த தஞ்சை ஆட்சியர் !
கடந்த இரு நாட்களாக கும்பகோணம் அருகே அணைக்கரை பாலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆம்புலன்ஸ்-ற்கு வழிவிடவில்லை என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது முற்றிலுமாக தவறான புரிதல் என்பதை உணர்த்தும் வகையில், இது குறித்த உண்மைத்தன்மையை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினையும், மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.
கடந்த 5-ம் தேதி கல்லணை முதல் அணைக்கரை மதகுசாலை வரை கொள்ளிடம் ஆற்றின் கரையில் பயணம் மேற்கொண்டு 81 கி.மீ தூரத்தினை காலை முதல் மாலை வரை. சுமார் 12 மணி நேரம் பயணம் செய்து மக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை(கீழணை) - ஆய்வு மாளிகையில் அரசு அலுவலர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்ததினால் அணைக்கரை பாலம் வழியாக ஆய்வு மாளிகைக்கு சென்றார். அணைக்கரை பாலத்தின் பாலம் என்பது ஒரு வழியாக மட்டுமே செல்லக்கூடிய பாலம். ஒரு வழியாக வாகனங்கள் வந்தால் மறுபுறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும். மறுபுறத்தில் வாகனங்களை அனுமதிக்கும் போது, அந்தப் பக்கத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும். இதுதான் அன்றும் நடந்தது.
கொள்ளிடம் ஆற்றின் வலது கரையோரம் ஆய்வு செய்துவிட்டு அணைக்கரை பாலத்திற்குள் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பாதுகாப்பு வாகனங்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வாகனமும், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, தீயணைப்புத்துறை என அனைத்து துறை வாகனங்களும் நுழைந்தது.
கிட்டத்தட்ட 1 கி.மீ தூரம் கொண்ட பாலத்தின் மைய பகுதியில் துறை அலுவலர்களின் வாகனங்கள் செல்லும் போதுதான் மறுபுறம் அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) வந்துள்ளது. அந்நேரத்தில் வாகனங்கள் பின்னோக்கி செல்வதை விட, முன்னோக்கி வேகமாக சென்று அவசர ஊர்திக்கு வழி விடுவதுதான் அப்போதைய சிறந்த முடிவாக இருந்தது.
அதன்படியே பாதுகாப்பு வாகனத்தின் பாதுகாவலர்கள் வழிகாட்டியுடன் அனைத்து துறை வாகனங்களும் அதே வழியாக வேகமாக சென்றுள்ளது. பாதுகாப்பு அலுவலர்களின் துரிதமான முடிவினால் அவசர ஊர்திக்கான வழி விரைவில் கிடைத்தது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!