Tamilnadu
6 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் - selfie எடுக்கும்போது அருவியில் விழுந்த இளைஞர் !
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவ மழை காரணமாக தென்மாவட்டங்களில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் (வயது 28) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் நண்பர்களுடன் சேர்ந்து ஈரமான பாறையின் மேல் ஏறி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் எதிர்ப்பாராத விதமாக பாறை வழுக்கி அருவியின் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கதறியுள்ளனர். இதையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்து அஜய் பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் எவ்வளவு தேடியும் அஜய்யின் உடல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அஜய் பாண்டியனின் உடலை தொடர்ந்து 6 நாட்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மீனாட்சி ஓடை என்ற இடத்தில் அஜய்யின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அஜய் பாண்டியன் அருவியில் விழும் வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!