Tamilnadu
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு : தனிப்பட்டோர் விசாரணையில் ஈடுபட்டால் நடவடிக்கை -CBCID போலிஸார் எச்சரிக்கை !
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் கலவரமாக மாறியதில், அந்த பள்ளியிலுள்ள பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்கள் சூறையாடபட்டது.
இதனால் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பள்ளி வாகனத்திற்கு தீ வைத்ததோடு காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். பின்னர் இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி உத்தரவிட்டார். அதோடு இந்த வன்முறையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைத்து கலவரக்காரர்களையும் கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் சிலர் இந்த விசாரணையை பாதிக்கும் வகையில் தனியாக விசாரணை நடத்தியும், காவல்துறை அனுமதி இல்லாமல் வீடியோ வெளியிட்டும் வந்தனர். இதனால் விசாரணை பாதிக்கபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், மாணவி மரண வழக்கில் விசாரணையை பாதிக்கும் வகையில் வீடியோக்கள் எதையும் வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி போலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிபிசிஐடி பொலிஸார், நீதியை நிலைநாட்டுவதற்கும் புலன் விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனி நபரோ அல்லது நிறுவனமோ இதுபோன்ற விசாரனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், வழக்கு தொடர்பாக யாருக்கேனும் தகவல் கிடைத்தல் சிபிசிஐடி உயரதிகாரியின் தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?