Tamilnadu
வீட்டை விட்டு சென்ற மனைவி.. செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன்!
திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உள்ள டவரில் இன்று காலை 6 மணி அளவில் ஏரி கீழே குதித்து விடுவதாகத் தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு
சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். கொத்தனார் வேலை செய்யும் இன்று மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் அவரது னைவி கோபித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த செந்தில் குமார் அப்பகுதியிலிருந்து செல்போன் டவர் மீது ஏறி தீ அணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர், நான் செல்போன் டவரில் மேல் இருக்கிறேன். சண்டைபோட்டு வெளியே சென்ற எனது மனைவியை அழைத்து வந்தால் மட்டுமே கீழே இறங்குவேன். இல்லை என்றால் குதித்து விடுவேன் என கூறியுள்ளார்.
இது குறித்துத் தீயணைப்புத் துறையினர் போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பிறகு போலிஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்று செந்தில் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிறகு போலிஸார் அவரது மனைவியை அங்கு வரவழைத்து, அவரை செந்தில் குமாருடன் செல்போனில் பேசவைத்துள்ளனர். இதன்பிறகே செந்தில் குமார் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் கணவன், மனைவியைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று போலிஸார் அறிவுரை கூறியுள்ளனர்.
மனைவியிடம் சேர்த்து வைக்கச் சொல்லி செல்போன் டவரில் ஏரி வாலிபர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!