Tamilnadu
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டால் மக்களிடம் வெளிப்படையாக சொல்வோம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டில் புற்று நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புற்றுநோய்க்காக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார். அதுமட்டுமின்றி குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது.
எனவே தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!