Tamilnadu

காணாமல் போன ’பொன்னியின் செல்வன்’ செம்பியன் மகாதேவி சிலை.. அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு !

கடந்த 2005 ஆம் ஆண்டு தஞ்சாவூரின் சரஸ்வதி மாளிகை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த, தமிழில் முதல் முதலில் அச்சடிக்கப்பட்ட பைபிள் நூல் காணாமல் போனது. அப்போதிலிருந்து இந்த பைபிளை தேடும் பணியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் லண்டன் அரசர் வைத்துள்ள பொருட்களின் புகைப்படங்கள் வெளியானது. அந்த புகைப்படத்தில் தமிழ்நாட்டில் காணாமல் போன பைபிள் போன்ற ஒரு புத்தகம் இடம்பெற்றிருப்பதை தமிழ்நாட்டு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சி.ஐ.டி பிரிவு கண்டுபிடித்துள்ளது.

கடந்த மாதம் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க, தற்போது சோழ வம்சத்தை சேர்ந்த சுமார் 1000 வருடத்திற்கு மேல் பழமையான செம்பியன் மகாதேவி உலோக சிலை அமெரிக்கா அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம், செம்பியன் மகாதேவி என்ற கிராமத்தில் உள்ள சிலை போலியானது எனவும், சுதந்திரத்திற்கு முன்பு காணாமல் போன சென்பியன் மகாதேவி சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து தற்போது இந்த சிலையை இந்தியாவுக்கு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

செம்பியன் மகாதேவி என்பவர், சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜ ராஜ சோழனுக்கு பாட்டி முறையாகும். மேலும் இவர் பேரரசர் சுந்தர சோழருக்கு மனைவியும், மதுராந்தக சோழருக்கு தாயுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரூ.22 கோடிக்கு ஏலம் போன சட்டை.. - அப்படி என்ன Special ?