Tamilnadu
வெண்ணிலா கபடிக்குழு பாணியில் களத்திலேயே உயிரிழந்த கபடி வீரர்.. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். அங்குள்ள தனியார் கல்லூரியில் B.Sc 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்றுவரும் இவர் பல்வேறு கபடி போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று பண்ருட்டி அருகேயுள்ள மாண்டிகுப்பத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்த போட்டியில் கலந்துகொண்ட இவர், ரைடு சென்றுள்ளார். அப்போது எதிரணி வீரர் ஒருவர் முட்டுக்காலால் விமல்ராஜின் நெஞ்சில் மோதியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கீழே விலுந்த அவர் எழுந்திருக்க முயன்றபோது கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு, அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, விமல்ராஜின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவர் களத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?