Tamilnadu
கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்..முதியவரை வெளிநாடு அழைத்து சென்று அடகுவைத்த இளைஞர்..மகள் கண்ணீர் புகார்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 70). இவர் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாடகைக்கு தணிவந்துள்ளார்.
அந்த நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்ப கஷ்டத்தை கூறி, சக்திவேளிடம் ரூ.25 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அந்த தொடையை சக்திவேல் பலமுறை கேட்டும் அந்த நபர் திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி இலங்கையை சேர்ந்த நபர் சக்திவேலிடம் தனக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிலர் பணம் தர வேண்டி உள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அப்படியே வெளிநாட்டை சுற்றிப்பார்த்து வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சக்திவேல் , ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு அந்த இலங்கை நபருடன் சென்றுள்ளார். பின்னர் அங்கு இருக்கும் ஒரு நபரிடம் சக்திவேலை ரூ.7 லட்சத்துக்கு அடமானம் வைத்து அந்த இலங்கை நபர் நாடு திரும்பியுள்ளார்.
இந்த தகவலை சக்திவேல் சென்னையில் வசிக்கும் தனது மகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் சென்னையில் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் இந்த பகீர் சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.
பின்னர் போலிஸார் அறிவுரைப்படி பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!