Tamilnadu
நண்பரின் GPay-வை பயன்படுத்தி தனது சொந்தக் கடனை அடைத்த இளைஞர்.. லட்சக்கணக்கில் பணத்தை திருடியது எப்படி ?
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேச கண்ணன். இவர் கடந்த வாரம் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுபோவதாக காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்த வழக்கை சைபர் கிரைமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து சைபர் கிரைம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கணேசனின் நண்பரான சரவணன் தான் இந்த மோசடி விசயத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரிக்கையில், உண்மையை ஒப்புக்கொண்டு, எப்படி கணேசனின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை திருடியது குறித்து விவரித்தார்.
அதாவது பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் சரவணனுக்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது நண்பர்களிடம் பணம் கேட்டும் அவர்கள் தர மறுத்துள்ளனர். கணேசனிடம் கேட்ட போதும், அவர் கொடுக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த சரவணன், ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கணேசன் எப்போதும் தனது வங்கி விவரங்களை தனது மொபைல் போனில் சேமித்து வைத்திருப்பதை அறிந்த சரவணன், தனது எண்ணிற்கு recharge செய்ய வேண்டும் என்று கூறி அவரது மொபைலை வாங்கியுள்ளார். அப்போது அவரது வங்கி விவரங்களை தனக்கு இரகசியாமாக அனுப்பியுள்ளார்.
இதையடுத்து கணேசனின் மொபைல் எண்ணை செயலிழக்க செய்து, அதே எண்ணை சரவணன் அவர் பெயரில் மாற்றம் செய்து வாங்கியுள்ளார். பின்னர் அதை பயன்படுத்தி கணேசனின் வங்கி கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்தை GPay மூலம் தான் கடன் பெற்ற நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
விசாரணையின் போது உண்மையை ஒப்புக்கொண்ட சரவணனை சைபர் கிரைம் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இது போன்ற முக்கிய விவரங்களை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டாம் எனவும், நண்பராக இருந்தாலும் கூட அவர்களிடம் வங்கி போன்ற முக்கிய விவரங்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் காவல்துறையினர் அருவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!