Tamilnadu
கள்ளக்குறிச்சி பள்ளியில் பொருட்களை திருடி சென்ற கலவரகாரர்கள்: போலிஸுக்கு பயந்து திருப்பி கொடுத்த சம்பவம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களையும் சூறையாடினர். இதனால் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பள்ளி வாகனத்திற்கு தீ வைத்ததோடு காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர்.
இதையடுத்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார். பின்னர், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்த வன்முறை தொடர்பாக 2000-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு, சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை பரப்பி வருபவர்களை குறி வைத்து அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
இந்த கலவரத்தை பயன்படுத்தி அங்கிருந்த கலவரக்காரர்கள் பள்ளியில் இருந்த மேஜை, நாற்காலிகள், வகுப்பறைகளில் இருந்த டேபிள், பென்ச், சமையல் பாத்திரங்கள், ஏசி மிஷின்கள், கம்ப்யூட்டர்கள், சேர், ஃபேன் , என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அள்ளி சென்றனர்.
இதையடுத்து சின்னசேலம் வருவாய் துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி, அந்த பகுதிகள் அனைத்திலும் தண்டோரா மூலம் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது கலவரம் நடந்த போது எடுத்து செல்லப்பட்ட பொருட்களை எடுத்தவர்கள் அந்த பள்ளியின் முன்பு தானாக முன் வந்து போட்டுவிட வேண்டும். இல்லையெனில் அவர்கள் யாரென்று கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோரா மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த பள்ளியில் எடுத்து சென்ற சேர், பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களையெல்லாம் இரவோடு இரவாக சாலையோரங்களில் மக்கள் வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் கணியாமூர் பகுதியில் மேசைகள், நாற்காலிகள், சிலிண்டர், சமையல் பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் குவிந்து கிடக்கின்றன.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!