Tamilnadu
ரூ.100 கோடி வரி ஏய்ப்பு.. அதிமுக ஆட்சியில் அள்ளிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் : எடப்பாடிக்கு சிக்கல்!
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோவை,சேலம், தென்மாவட்டங்கள் என பல இடங்களில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப்பணிகள் ஆர்.ஆர்.நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. சாலை பணிகள், மேம்பாலங்கள், அரசு கட்டுமான பணிகள் போன்ற அரசு ஒப்பந்தங்கள் இந்த நிறுவனத்துக்கே வழங்கப்பட்டன.
இந்த நிறுவனம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உள்பட 50-க்கும் மேற்பட புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்தன. மேலும் முறையாக வரிசெலுத்தாமலும் இருந்துள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை 9 மணி முதல் சுமார் 30 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியது.
இந்த ஆய்வில் வருமானத்தை குறைத்துகாட்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வரி ஏய்ப்பின் மொத்த தொகை சுமார் 100 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த இந்த நிறுவனத்தின் அதிபர் ராமு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அமைச்சர்களுக்கு நெருக்கமாக வலம் வந்தவர் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க தலைவர்களுக்கும் இருந்த தொடர்பு காரணமாகவே வருமானத்துக்கு அதிகமாக இந்த அளவு சொத்து சேர்ந்துள்ளார் என்றும், இதில் அ.தி.மு.க.வினருக்கும் பங்கு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!