Tamilnadu
கோவையில் கஞ்சா சாக்லேட் விற்ற வட மாநில வியாபாரி.. சுற்றிவளைத்து கைது செய்த போலிஸ்!
கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அடுத்துக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலிஸார் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது போதை சாக்லேட் விற்ற சேத்தன் என்ற ராஜஸ்தான் மாநில வியாபாரியை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 40 கிலோ போதை சாக்லேட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சாக்லேட்டில் கஞ்சா கலந்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேபோல் இவருக்கு வேறு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்று வேறு இடங்களில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!