Tamilnadu
முயல் வேட்டைக்கு சென்ற 3 பேர் மின் வேலியில் சிக்கி பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமமக்கள்!
திண்டிவனம் அருகே விவசாய வாழைப்பழத் தோட்டத்திற்கு வைக்கப்பட்டிருந்த மின்வெளியில் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகதாஸ், சுப்ரமணி, வெங்கடேசன். இவர்கள் மூன்று பேரும் நேற்று இரவு திண்டிவனம் அடுத்த பிரம்ம தேசம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் முயல் வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகினறது.
இந்நிலையில், அப்பகுதியில் சடகோபன் என்பவரின் வாழை தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி முருகதாஸ், சுப்பிரமணி, வெங்கடேசன் ஆகிய மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பரிதாபமாக பலியாகி உள்ளனர்
இது குறித்து தகவல் அறிந்த பிரம்மதேச போலிஸார் சம்பவ இடத்திற்க்குக்கு நேரில் சென்று மின்வேளியில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சமுண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்த போலிஸார் நிலத்தின் உரிமையாளர் சடகோபன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பம் குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ். பி .ஸ்ரீநாதா திண்டிவனம் காவல் நிலையத்தில் உரிமையாளர் சடகோபனிடம் விசாரணை நடத்துகிறார்.
திண்டிவனம் அருகே முயல் வேட்டைக்கு சென்றவர்கள் மின் வேளியில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையேயும், கிராமத்திலும், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!