Tamilnadu
“இன்னொரு ‘தூத்துக்குடி சம்பவத்துக்கு’ இடம் கிடையாது..” : ‘சங்கி’ மந்தி கும்பலுக்கு TRB.ராஜா பதிலடி !
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கணியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களையும் சூறையாடினர். இதனால் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பள்ளி வாகனத்திற்கு தீ வைத்ததோடு காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர்.
இதையடுத்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு, உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி ஆகியோர் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்டனர்.
இதனிடையே வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார். பின்னர், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தி.மு.க. தொழில்நுட்ப அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "திராவிட மாடல் ஆட்சியில் இன்னொரு 'தூத்துக்குடி சம்பவத்துக்கு' ஒரு போதும் இடம் கிடையாது. தூண்டிவிடும் சங்கி மந்திகளை தொடர்ந்து நாம் அம்பலப்படுத்துவோம். Please show extreme restraint while dealing with such sensitive issues. Hope the family finds peace. Our CM will deliver Justice..
சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் போடப்பட்ட அனைத்து பதிவுகளையும் @ITWreports என்ற ட்விட்டர் பக்கம் தொடர்ந்து பதிவிறக்கி வருகிறது. அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும். கலவரத்தை தூண்டிய அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும். மேலும் பதிவுகள் இருந்தால், அதனை @ITWreports -ல் tag செய்யவும்..
நியாயமான விசாரணை நடைபெறும். மாணவியின் குடும்பத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். இந்த சம்பவத்தில் அரசியல் லாபத்திற்காக கீழ்தரமான செயல்களை செய்திருக்கும் அரசியல் சாக்கடைகளுக்கு மக்கள் பாடம் கற்பிப்பது உறுதி. நிலைமையை தடம் பிறழாமல் மிக ஜாக்கிரதையாக கையாண்ட முதல்வருக்கு நன்றிகள்.
இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் எதையும் தீர விசாரிக்காமல் பதிவிடுவதை தவிர்க்குமாறு விங்கிற்கு அறிவுறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவசரகதியில் பதிவிடக்கூடாது என உடன்பிறப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எதிரி எதிர்பார்த்தது "இரண்டாம் தூத்துக்குடி" இதில் யாருக்கும் சந்தேகமில்லை...
பள்ளி நிர்வாகம், சம்பவத்தை சமூக வலைதளங்களில் தூண்டிவிட்டு கலவரச் சூழலை உருவாக்கியவர்கள், இதை காரணமாக சொல்லி தமிழகம் எங்கும் பள்ளிகள் இயங்காமல் இருக்கும் சூழலை உருவாக்க முயன்ற தற்குறிகள் என்று அனைவருமே சங்கி மந்திகள் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதற்கு பல சாட்சிகள் இருக்கின்றன!
சம்பவம் நடந்த அன்றே காவல் துறையினர் அவர்களது பணியை துவங்கியுள்ளனர். அமைச்சர் கணேசன் அவர்களும் உயர் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரித்தனர். இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இந்த சம்பவத்தை பயன்படுத்தி தமிழகத்தில் மேலும் ஒரு தூத்துக்குடி சூழலை ஏற்படுத்த காவிக்கூட்டம் துடிக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு,சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்த துயரமான சம்பவத்தில் கூட கேவலமான அரசியல் ஆதாயம் தேடியிருக்கும் கயவர்கள் மீதும் "நடவடிக்கைகள்" தேவை ! அனைத்து குற்றவாளிகளும் நிச்சயம் சட்டபடி தண்டிக்கப்படுவார்கள்.." என்று பதிவிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!