Tamilnadu
கள்ளக்குறிச்சி விவகாரம் : “மாணவர்களை வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை” : அமைச்சர் முக்கிய தகவல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களையும் சூறையாடினர். இதனால் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பள்ளி வாகனத்திற்கு தீ வைத்ததோடு காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர்.
இதையடுத்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு, உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி ஆகியோர் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்டனர். இதனிடையே வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார். பின்னர், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வன்முறை நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட செல்லவுள்ளார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் பள்ளியின் சேதாரங்களை ஒழுங்கு படுத்த சில நாட்கள் எடுக்கும் என்பதால், அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகிலுள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!