Tamilnadu
கோவை பாலம் அமைத்தலில் திட்டமிடல் இல்லை..விபத்தை தடுக்க குழு அமைப்பு! -அமைச்சர் செந்தில் பாலாஜி!
கோவை, திருச்சி சாலையில் ரூ.253 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த மாதம் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதத்துக்குள் மூன்று பேர் அந்த பாலத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த மேம்பாலத்துக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேம்பாலம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "சரியான திட்டமிடல் இல்லாமை, உரிய வழிமுறைகள் இல்லாமல் பாலம் கட்டியுள்ளனர். இதன் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். தொடரும் விபத்துக்களால் வேகத்தடை அமைத்தல், 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இது போன்ற தற்காலிக ஏற்பாடுகளை தாண்டி மேம்பாலத்தின் இரு பக்கங்களிலும், தனியார் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெறும். பாலம் நேராக இல்லாமல் 70 டிகிரிக்கு குறுகலாக திரும்பக்கூடிய அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அடங்கிய குழு அமைக்கப்படும்
எதிர்காலத்தில் முழுமையாக விபத்துகளை தவிர்ப்பதற்காகதான் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பக்க சுவர் எழுப்பினாலும், 3 கி.மீ தொலைவு மேம்பாலத்தை 40 கி.மீ வேகத்தில் செல்லுங்கள் என்று வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!