Tamilnadu
போக்குவரத்து நெரிசலில் ஆரன் ஒலித்தால் என்ன நேரிடும்?-நூதன முறையில் விழுப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறை!
ஆரோக்கியமான சத்தம் பகலில் 55 டெசிபலையும் இரவில் 40 டெசிபலையும் தாண்டக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் மோட்டார் வாகனத்தின் ஹாரன் ஒலி மாசுக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது.
மேலும் ஒலி மாசுபாடு காரணமாக உயர் பதற்றம், அதிக மன அழுத்தம், தூக்கமின்மை, இதய நோய், மனநோய் போன்ற உடல்நல பிரச்னைகளைகளும் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒலி மாசை கட்டுப்படுத்த பல்வேறு அரசுகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ‘நோ ஹான்கிங்’ (No Honking) என்னும் இயக்கம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மற்றும் தேவையற்ற ஹாரன் அடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாகனங்களால் ஏற்படும் ஒலி மாசை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்வை கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். அதன் படி ஒரு வாரம் ஒலி சத்தம் எழுப்பாமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒலி எழுப்பாமை விழிப்புணர்வு வாரத்தைக் கடைபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது சென்னை போக்குவரத்துக்கு போலிஸின் முகநூல் பக்கத்தில், ஒலி மாசுபாட்டை குறிக்கும் விதமாக கேள்வி ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அதில், நீங்கள் போக்குவரத்து நெரிசலில் இருக்கும் போது ஆரன் ஒலித்தால் என்ன நேரிடும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு option-களாக திடிர் என சிக்னல் பச்சையாக மாறும், சாலை திடிர் என்று அகலமாக மாறும், வாகனங்கள் திடிர் என உயரமாக செல்லும், இதில் ஒன்றும் நடக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலில் இருக்கும் போது ஆரன் ஒலித்தால் ஏதும் மாற்றம் நிகழாது, எனவே அந்த தருணத்தில் ஆரன் ஒலிக்க வேண்டாம் என வித்தியாசமான முறையில் விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!