Tamilnadu

கனமழையால் ராட்சத மண்சரிவு.. சீருடையோடு JCB இயக்கி சாலைகளை சீரமைத்த காவலர் - குவியும் பாராட்டு !

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு சாலைகளில் மர விழுந்து போக்குவரத்து பாதிப்பும், குறிப்பாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

மேலும் சில பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று அதிகாலை பெங்களூர் கேரள மாநிலம் வயநாடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மன்சரி ஏற்பட்டது.

நீலகிரி JCP இயந்திரங்கள் பயன்படுத்த தடை உள்ள சூழ்நிலையில் சில இயந்திரங்கள் மட்டும் அரசு பணிகள் மற்றும் இதர பணிகளுக்கு அனுமதியோடு செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்த ஓட்டுனர்கள் என்பது மிகவும் தட்டுப்பாடு உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மார்தோமா நகர் பகுதியில் ராட்சத மூங்கில் துருடன் பெரிய அளவில் மன்சரிவு ஏற்பட்டது. ஆனால் JCP இயந்திரத்தை இயக்குவதற்கு ஓட்டுனர் இல்லாததால் அதிகாரிகள் இருந்த நிலையில், கூடலூர் போக்குவரத்து காவலராக பணியாற்றும் கருணாகரன் இன்று பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தானாக முன்வந்து ஜேசிபி இயந்திரத்தை இயக்கி வாகனங்கள் சென்று வருவதற்கான பணியை மேற்கொண்டார். இதனால் மூன்று மாநில பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சென்றுவராத சூழ்நிலை இருந்த இவரின் இந்த பணியால் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

இதன் மூலம் 4 மணி நேரம் போக்குவரத்து சரிசெய்ப்பட்டது. இவர் செயல்பாடு காவல்துறை உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளது. இவர் ஜேசிபி வாகனத்தை இயக்கும் இந்த காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: ஈரத்துணிகளை கம்பியில் காயப்போட்ட பெண்.. மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி !