Tamilnadu
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி.. முகக்கவசம் அணிவோம் - பாதுகாப்பாய் இருப்போம் என ட்வீட்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நாள்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.
அதன்படி இன்று செங்கல்பட்டில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு செய்தார், அதை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அது குறித்து செஸ் ஒலிம்பியாட் குழுவுடன் இன்று ஆலோசனையும் மேற்கொண்டார்.
இந்த நிலையில், கொரோனா தொற்ற உறுதியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!