Tamilnadu
மக்களே உஷார்.. ஆசை வார்த்தை கூறி திருமண மோசடி - ரூ.54 லட்சத்தை அபேஸ் பண்ணிய நைஜீரியன் !
புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் - ஜனனி தம்பதியினர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனனி, சென்னை விமான நிலையத்தில் வேலை வேண்டி விண்ணப்பம் செய்திருந்தார். அந்த சமயத்தில் அவரது மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்ட ஒருவர், விமான நிலைய வேலைக்கு நேர்முக தேர்வு இருப்பதாகவும், அதற்காக ரூ.1,800 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஜனனியும், பணத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து மீண்டும் மீண்டும் அந்த நபர் அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டபோதெல்லாம் பணத்தை கொடுத்து வந்துள்ளார். இப்படியாக இதுவரை ரூ.14 லட்சத்து 48 ஆயிரத்து 680 கொடுத்துள்ளார். இருப்பினும், ஜனனிக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜனனி, அந்த நபரிடம் பணத்தை திரும்ப கேட்டபோது, அந்த நபர் தனது மொபைல் எண்ணை மாற்றியுள்ளார்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜனனி, தனது கணவர் தினேஷுடன் புதுச்சேரி சைபர் கிரைமில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது டெல்லியை சேர்ந்த விஜய்குமார் குப்தா என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் டெல்லி சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதே போல், புதுச்சேரியை சேர்ந்த சுனைனா நரங் என்ற இளம்பெண் ஒருவர், வெளிநாட்டு திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். அதனை கண்ட ஒருவர், இவரை தொடர்பு கொண்டு, தான் கனடா நாட்டில் இருப்பதாகவும், அங்கு மருத்துவராக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
இருவரும் தொலைபேசி மூலம் பழகி வந்த நிலையில், ஒரு நாள் நமக்கென்று சொந்தமாக ஒரு மருத்துவமனை கட்டினால், நன்றாக இருக்கும் என்று கூற, இவரோ உடனே ரூ.54 லட்சத்தை அனுப்பியுள்ளார். இது நடந்த சில நாட்களிலே அவரது எண் வேலை செய்யவில்லை. பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுனைனா நரங், சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், நைஜீரியா நாட்டை சேர்ந்த இமானுவேல் அனிடேபே (44) என்பவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்று பணம் கேட்டவுடன் யாரும் யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்றும், முகம் தெரியாத நபர்களிடம் பழகுவதை தவிர்க்க வேண்டும் என்றும் காவல் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?