Tamilnadu
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. முகக்கவசம் அணியாவிட்டால்? : மாநகராட்சி அதிரடி உத்தரவு என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், திரையரங்கு, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!