Tamilnadu
பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சகோதரர்கள்.. சினிமா பட பாணியில் 5 கி.மீ விரட்டி பிடித்த போலிஸ்!
சென்னை வேளச்சேரியில் கடந்த 17ஆம் தேதி, நடந்து சென்ற பெண்ணிடம் 7 சவரன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம பறித்துச் சென்றதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதேபோல், மேலும் இரண்டு இடங்களில் செயின் பறிப்பு முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளது. இது தொடர்பாகவும் காவல்நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து வேளச்சேரி போலிஸார் செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், ஒரே கும்பல்தான் அனைத்து இடங்களிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது போலிஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வேளச்சேரி காமாட்சி மருத்துவமனை அருகே தனிப்படை போலிஸார் சென்று கொண்டிருந்தபோது, சி.சி.டி.வி காட்சியில் பதிவான இருசக்கர வாகனம் அவ்வழியாகச் சென்றதைக் கண்டு அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்துள்ளனர்.
அப்போது, போலிஸார் பின் தொடர்வதைக் கண்ட அவர்கள் உடனே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இருந்தும் போலிஸார் விடாமல் சினிமா பட பாணியில் சுமார் 5 கிலோ மீட்டர் விரட்சி சென்று அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள்தான் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் இருசக்கர வாகனத்திலிருந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில்,சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அக்கீம்(24), கண்ணகி நகரை சேர்ந்த ஜான் பாஷா என்பதும், இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் அளித்த தகவலின் பேரில் பறிப்பில் ஈடுபட செல்லும் போது இருசக்கர வாகனத்தை ஓட்ட பயன்படுத்தும் மற்றொரு நபரான நீலாங்கரையைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(22) என்பவரையும் போலிஸார் கைது செய்தனர்.
மேலும் ஜூன் 17,18,19 ஆம் தேதிகளில் வேளச்சேரி, பம்மல், பல்லாவரம், மடிப்பாக்கம் உட்பட பல இடங்களில் 30 சவரன் நகைகள் பறித்துள்ளதாக போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் கொள்ளையடித்த நகைகளை குறைந்த விலையில் விற்பனை செய்து விலையுயர்ந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது
பின்னர், கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து பறிப்பில் ஈடுபட பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்து மேலும் மூன்று பேரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!