Tamilnadu
அதிமுக ஆட்சியில் 750 கோடி மோசடி - ஊழல்வாதிகளின் சொத்துகள் விரைவில் முடக்கம் - அமைச்சர் பெரியசாமி தகவல்!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள வீரக்கல்லில் கூட்டுறவு துறை சார்பாகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்வில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்குச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, அ.தி.மு.க-வின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டில் புதிதாக 5 கல்லூரி கூட துவங்கப்படவில்லை. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குள் 33 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 750 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்று உள்ளது. இதற்காகச் சட்டக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி, மோசடி செய்தவர்களைக் கண்டறிந்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் செய்து ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கக்கூடிய தொகையை அரசிடம் ஒப்படைக்கப்படும்.கூட்டுறவுத் துறையில் காளியாக உள்ள பணியிடங்கள் இரண்டு மாதத்திற்குள் நிரப்பப்படும் தவறு நடக்காதவாறு வெளிப்படைத் தன்மையுடன் பணியிடங்கள் நிரப்பப்படும்.
தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும். இதில் முறையீடு நடைபெற வாய்ப்பு இல்லை. கூட்டுறவுத் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உருவாகி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!