Tamilnadu

“எடப்பாடியை நாங்கதானே CM ஆக்கினோம்.. அதுல ஒரு விஷயம் இருக்கு” : பா.ஜ.க நயினார் நாகேந்திரன் பேச்சு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌ தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீரீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை பொதுக்குழுவே நிராகரித்த சம்பவம் அரங்கறியது. மேலும் உட்கட்சி பூசல் காரணமாக பல மாவட்டங்களில் கட்சித்தொண்டர்கள் மத்தியில் மோதல் போக்கு என்பது அரங்கேறும் சூழல்களும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிச்சாமி யை முதல்வர் ஆக்கியதே பாஜக அரசு தான்- வருகிற 2024 ம் தேர்தலிலும் அதிமுகவுடன் இணைந்தே போட்டியிடுவோம்” என்று தமிழக சட்டமன்ற குழு பா.ஜ.க தலைவரும், நெல்லை சட்டமன்றஉறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழக சட்டமன்ற குழு பா.ஜ.க தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் வருகை தந்து முருகனை வழிபட்டார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வர இருக்கின்ற 2024 ம் தேர்தலிலும் அ.தி.க.மு.வுடன் இணைந்து தான் தேர்தலில் போட்டியிடுவோம். அ.தி.மு.க.வில் தலைவரின் மறைவிற்கு பிறகும் இம்மாதிரியான ஒற்றை தலைமை போன்ற சிறுசிறு சலசலப்புகள் இருப்பது என்பது இயல்பானதே. மேலும் பா.ஜ.க அரசு பல்வேறு சூழ்நிலைகளில் நட்புடன் ஆதரவு அளித்தது மட்டுமில்லாமல், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதும் பா.ஜ.க அரசு தான்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 100க்கும் அதிகமான இளம்பெண்களின் ஆபாச படங்கள்: மகனுக்கு துணை போன நாகர்கோவில் காசி தந்தைக்கு ஜாமீன் மறுப்பு