Tamilnadu

பிரபல பரோட்டா கடைக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை - பின்னணி என்ன?

மதுரைக்கு ஒரு புறம் 'மல்லி', 'மீனாட்சி அம்மன்' என்றிருக்க, மறுபுறம் 'பரோட்டா' என்ற பெருமையும் சேரும். அதுவும் மதுரையிலுள்ள பரோட்டா கடைகளில் 'மதுரை பன் பரோட்டா' கடை மிகவும் பிரபலமானது. Pure Non Veg மட்டுமே இருக்கும் இந்த கடையில் தயாரிக்கப்படும் உணவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆவின் சிக்னல் அருகில் இந்த கடையில் நாள்தோறும் கூட்டம் கூடும்.

இப்படியாக பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில், சிறிய பெட்டிக்கடைக்கான அனுமதியை பெற்று, நாளடைவில் அது பரோட்டா கடையாக மாறியது. நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் கூட கூட, பொது சாலையை ஆக்கிரமித்து கடை விரிந்து கொண்டே போனது. தற்போது ஆட்சி மாறியதும் சாலையை ஆக்கிரமிக்கும் பகுதிகள் மீது நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பே நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில், இந்த கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் அதை கொண்டுகொள்ளமல் கடை உரிமையாளர்கள் கடையை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து பொதுமக்கள் பலரும் தொடர்ந்து புரளித்த பின்னர், தற்போது அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து கடைக்கு அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

இது குறித்து அங்கிருப்பவர்கள் கூறுகையில், "இந்த கடையில் பரோட்டா மட்டுமின்றி அனைத்து உணவும் மிகவும் ருசியாக இருப்பதால் பொதுமக்கள் இங்கு வந்து வாங்கி உண்கின்றனர். ஆனால் அவர்கள் அது தரமுள்ளதாக இருக்குமா என்று கூட எண்ணியதில்லை. நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த மாதிரி சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் உணவு கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்' என்றனர்.

Also Read: கணவருக்கு தெரியாமல் ரகசிய காதல்.. காதலன் - காதலி சேர்ந்ததால் களேபரம்.. வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்!