Tamilnadu
சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்.. பத்திரமாக மீட்ட இன்ஸ்பெக்டர்: நெகிழ்ச்சி சம்பவம்!
கோவை, உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில், இரயில்வே மேம்பாலத்தின் மீது, சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் முஜிப்பூர் ரகுமான் என்பவர் காலில் பலத்த காயம் அடைந்தார்.
இதை அவ்வழியாக ஜீப்பில் வந்த சிங்காநல்லூர் காவல்துறை ஆய்வாளர் அருண் மற்றும் கோவை மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் மரியமுத்து ஆகியோர் பார்த்துள்ளனர். உடனே ஜீப்பில் இருந்து இறங்கி வந்து, வாலிபரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வழியாக சென்ற காவல்துறை அதிகாரிகள், விபத்திற்குள்ளான வாலிபரை மீட்டு சிகிச்சை அளிக்க உதவிய சம்பவத்தை அறிந்த காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் , கவால் ஆய்வார்கள் இருவரையும் பாராட்டியுள்ளார்.
காவல்துறை என்றால் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள் என்ற எண்ணை மாற்றி, "காவல்துறை உங்கள் நண்பன்" என்று செயலில் காட்டிய காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்