Tamilnadu

ஒரு முடிவும் இல்லை..10 நிமிடத்தில் 100 ட்விஸ்ட்.. இதுக்குதான் 10 நாளா அக்கப்போரா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌ தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை முழுக்கம் எழுந்துள்ளது. இதனால் இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களின் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் இ.பி.எஸ் தரப்பில் தொடர்ந்து என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. எப்போதும் மேடையில் அருகருகே அமரும் இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் இந்த கூட்டத்தில் அப்படி அமரவில்லை. இவர்கள் இருவருக்கும் நடுவில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார். இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் இருவரும் இருக்கமான முகத்துடனே அமர்ந்திருந்தனர்.

முன்னதாக கூட்டத்தின் மேடைக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது இ.பி.எஸ் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரட்டை தலைமையால் சரியான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க-வால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை என ஒற்றை தலைமை கடிதம் வாசித்தபோது சி.வி.சண்முகம் குறிப்பிட்டார்.

பிறகு, அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தனக்கு சாதகமான சூழ்நிலை இல்லாததால் கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார். அப்போது, சட்டத்துக்கு புறம்பான பொதுக்கழு என மேடையில் கோஷமிட்டபடி ஒ.பன்னீர்செல்வதற்கு முன்பாக சென்றார் வைத்திலிங்கம்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏதாவது ஒரு முடிவு எடுக்கப்படும் என அ.தி.மு.க தொண்டர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் அந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் மீண்டும் ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கி சில நிமிடங்களிலேயே முடிந்தது அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் முடிந்துள்ளது.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது அவர்மீது தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி கட்சியின் பதவிக்காக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தொடர்ந்து மோதிக்கொண்டு வருவது அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Also Read: ‘நாங்களே தீர்மானம் போட்டு நாங்களே நிராகரிப்போம்’ : சொப்பு சாமான் விளையாட்டாகி போன அ.தி.மு.க பொதுக்குழு!