Tamilnadu
பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய சாமியார்.. துப்பு துலங்கியது எப்படி ? - CBCID பகீர் தகவல்!
திருவள்ளூர் மாவட்டம் செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஹேமமாலினி. இவருக்கு நாக தோஷம் இருப்பதாக பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் முனுசாமி மாணவியின் பெற்றோர்களிடம் மாணவிக்கு நாகதோஷம் இருப்பதாக பொய் சொல்லி அடிக்கடி நள்ளிரவு பூஜைக்கு வர வைத்துள்ளார்.
அதேபோன்று கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி நள்ளிரவு பூஜைக்கு வர வைத்துள்ளார். அப்போது பிப்ரவரி 14ஆம் தேதி காலை கல்லூரி மாணவி ஹேமமாலினி மர்மமான முறையில் சாமியார் முனுசாமி வீட்டில் இறந்து கிடந்தது தொடர்பாக அவருடைய தந்தை ராமகிருஷ்ணன் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தன் மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், பென்னலுர்பேட்டை காவல்துறை சட்டப்பிரிவு 174 சி.ஆர்.பி.சி வழக்குப்பதிவு செய்து மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி தலைமையில், ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், போலிஸார் விசாரணையில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்து சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
மாணவியின் பெற்றோர்கள் அளித்த மனுவின் கோரிக்கையின் அடிப்படையில் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு கடந்த மார்ச் 26-ஆம் தேதி நடத்த உத்தரவிட்டார்.
இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதமாக மாணவி மர்மமாக இறந்த விவகாரத்தில் மாணவி குடும்பத்தினர் சாமியாரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவில் சாமியார் கல்லூரி மாணவி ஹேமமாலினிக்கு நாக தோஷம் இருப்பதாக பெற்றோரிடம் பொய் சொல்லி அவரை அடிக்கடி கோவிலுக்கு வர வைத்து நள்ளிரவு பூஜைக்கு அழைத்து வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
இதனால் மாணவி கடந்த 13ஆம் தேதி சாமியார் வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ய தூண்டியதால் கல்லூரி மாணவி ஹேமமாலினி விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணையில் 376 (ll)(n) 417,306 இந்தியா தண்டனைச் சட்டப் பிரிவு 4 TNPWH சட்டம் 2002 என மாற்றம் செய்யப்பட்டு மேலும் வழக்கில் எதிரி சாமியார் முனுசாமி திருவள்ளூர் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் மற்றும் காஞ்சிபுரம் குற்றப் புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரால் இனைந்து சாமியார் முனுசாமியை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் இவ் வழக்கின் புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மகனுக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. வேலைவாய்ப்பு என்று கூறி மாணவர்களை வரவழைத்த அர்ஜுன் சம்பத் -கண்டனம்
-
Carrom World Cup : “பெருமை கொள்கிறேன் மகளே...!” - தங்கம் வென்ற காசிமா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி !
-
தொடரும் அங்கீகாரம்... 55-வது கோவா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த வெப் சீரீஸ் விருதுக்கு ‘அயலி’ பரிந்துரை!
-
“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !
-
அவதூறு பேச்சு... பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி கைது... புழல் சிறையில் அடைப்பு !