Tamilnadu
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் வேதாந்தா நிறுவனம்.. பத்திரிகையில் வெளிவந்த விளம்பரம்!
தூத்துக்குடியில், அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆலையை உடனே மூடவேண்டும் என வலியுறுத்தி 2018ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடந்தது.
இந்த போராட்டம் ஒடுக்கும் விதமாக அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து 2018 மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காகக் கடந்தாண்டு மூன்று மாதங்கள் மட்டும் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்பட்டது. பிறகு மீண்டும் மூடப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்கப்போவதாக இன்று பத்திரிக்கைகளில் விளம்பரம் மூலம் வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில், இதில் தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் உலகம் தரம் வாய்ந்த மற்றும் கழிவுகளை வெளியேற்றாத தொழிற்சாலை ஆகும் உலகில் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட இந்த காப்பர் ஸ்மெல்டர் மற்றும் ரிஃபைனரி காம்ப்ளக்ஸ் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை வரவேற்றுள்ள வேதாந்தா நிறுவனம் வருகிற ஜூலை 4ம் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளிகள் மின்னஞ்சல் மூலமாக அனுப்புமாறு வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தில் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு