Tamilnadu

‘மின்னகம்’ தொடங்கிய ஓராண்டில் 99.45% புகார்களுக்கு தீர்வு.. அசத்தும் மின்சாரத்துறை : அமைச்சர் தகவல் !

முந்தைய அ.தி.மு.க அரசின் மோசமான ஆட்சியால் மின்சாரத்துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. தி.மு.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து மின்சாரத்துறைக்கு தனிக் கவனம் செலுத்தி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும், மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கும் விதமாக 'மின்னகம் மின்நுகர்வோர் சேவை' மையத்தை கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்நிலையில், ‘மின்னகம்’ மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, இன்று அண்ணா சாலை மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள மின்னகம் மையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.

Also Read: ‘மின்தடை.. பழுது பிரச்சனையா?’ : புகார் அளிக்க தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் - குறைகளை எப்படி தெரிவிக்கலாம்?

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் நுகர்வோர்களுடைய குறைகளை நீக்கக்கூடிய வகையில், புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த 20.06.2021 அன்று தொடங்கி வைத்தார்.

தொடங்கப்பட்ட இந்த மின்னகம் சேவை மையம் மூலம், கடந்த ஓராண்டில் மட்டும் 9,17,572 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. அதேபோல், 9,12,599 புகார்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 99.45 விழுக்காடு புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது செயலி மூலமாக புகார்களை தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது மொத்தம் 60 அழைப்புகளை ஏற்கும் வசதி உள்ளது. எனவே 61வது அழைப்பு தான் காத்திருப்புக்கு செல்லும். ஆனால், செயலி அறிமுகப்படுத்திய பிறகு இப்படி எண்கள் அல்லாமல் மக்கள் அனைவரும் தங்கள் புகார்கள் உடனடியாக தெரியப்படுத்தலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அவருக்கு காமாலை உள்ளதால் கண்ணும் தெரியவில்லை; காதும் கேட்கவில்லை”: அண்ணாமலையை கடுமையாக சாடிய முத்தரசன்!