Tamilnadu

ஒருமை பேச்சு.. OPS - EPS ஆதரவாளர்களிடையே நடந்த கைகலப்பு ? - பாதிலேயே கிளம்பிய சி.வி.சண்முகம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌ தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீரீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

மேலும் நேற்றைய கூட்டரங்கிலும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ்-க்கும், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இ.பி.எஸ்- ஒற்றைத் தலைமை ஏற்குமாறு கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஒ.பி.எஸ். சொந்த ஊரில் அ.தி.மு.க தொண்டர்கள் ஒருவர், இ.பி.எஸ் தலைமையில் ஒற்றை தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும் என போஸ்டர் ஒட்டடிதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று, ஒற்றைத் தலைமை ஏற்று அ.தி.மு.க-வை வழிநடத்த வருமாறு, ஓ.பி.எஸ்-க்கு அவரின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க அலுவலகத்தில் காலை முதலேயே கூடி, தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், அ.தி.மு.க-வின் தலைமை அலுவகத்தில் ஆலோசனை கூட்டம் முடிந்தபின் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அப்போது காரில் ஏறி, ஜெயக்குமார் புறப்பட்ட முற்பட்டபோது, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் மற்றத்தொண்டர்கள் உதவியோடு ஜெயக்குமார் புறப்பட்டுச் சென்ற நிலையில், ஜெயக்குமார் அ.தி.மு.க-வை அழித்து வருவதாக அக்கட்சியை சேர்ந்த பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் ஆலோசனைக் கூட்டத்திலேயே ஜெயக்குமார் மற்றும் ஒரு தரப்பினரை ஒருமையில் பேசியதால் சிலர் கைகலப்பில் ஈருபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனால் கூட்டத்தின் பாதியிலேயே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாதிலேயே கிளம்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், எடப்பாடி பழனிசாமியை ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது பேசிய ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒருவர், ”கூவாத்தூர்ல எல்லா எம்.எல்.ஏ.க்கும் 1 கோடி ரூபாய் கொடுத்ததால்தான் எடப்பாடி பழனிசாமிய முதலமைச்சர் ஆக்குனாங்க... இப்போவும் அதேபோல காச கொடுத்து பொறுப்ப வாங்க பாக்குறாரு” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஜெயக்குமார் கார் மீது தொண்டர்களே தாக்குதல் : உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக.. வேடிக்கை பார்க்கும் தலைமைகள்!