Tamilnadu
‘அனாதை’ என்று திட்டியதால் ஆத்திரம்.. : பப்ஜி விளையாட்டின் போது நண்பனுக்கு கத்திக்குத்து - 4 பேர் கைது!
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த கூடப்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். அவருடைய நண்பர் சசிகுமார் இவர்கள் வீட்டின் அருகே இருவரும் பப்ஜி கேம் விளையாடியதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அப்போது அஜித் குமார், சசிகுமார் இடையே பப்ஜி கேம் விளையாட்டு போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. அஜித் குமார் சசிக்குமாரை பார்த்து "அப்பா அம்மா இல்லாத அனாதை.. உன்னை அடித்தால் யாரும் வர மாட்டார்கள்" எனக் கூறியுள்ளார்.
அப்போது "யார அனாதை-னு சொல்கிற" என கேட்டு சசிகுமார் அஜித்தை அடித்துள்ளார். வீட்டுக்குச் சென்ற அஜித்குமார் தனது சகோதரர்களான செல்வம், சாமுவேல், அபிலேஷ் ஆகியோரை அழைத்து வந்து சசிகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அஜித்குமார் தான் மறைத்து வைத்திருந்த துருபிடித்த கத்தி எடுத்து சசிகுமார் இடுப்புப்பகுதியில் குத்தியுள்ளார்.
சசிகுமார் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது உறவினர்கள், அஜித்குமார் தரப்பினரை தாக்கியுள்ளனர். இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த அஜித்குமார், சசிகுமார் மற்றும் சசிகுமாரின் உறவினர் ஆகியோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் தகவலறிந்து வந்த வெள்ளவேடு காவல்துறையினர், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருதரப்பினரை சேர்ந்த செல்வம், சாமுவேல், அபிலேஷ், விஜயகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, சசிகுமார் உறவினர் தெரிவிக்கையில், சசிகுமார்-அஜித் குமார் மோதல் 'பப்ஜி கேம்' விளையாட்டில் ஏற்படவில்லை என்றும், இதற்கு முன்பாக கடந்த வாரம் சசிகுமாருக்கு அஜித்குமாருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், சசிகுமாரை பார்க்கும் போதெல்லாம் அஜித்குமார் 'அனாதை' என திட்டியதால் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் கூறினார்.
பப்ஜி கேம் விளையாட்டில் ஏற்பட்ட விபரீததால் நண்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கத்திக்குத்து முடிந்துள்ளது கூடப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!