Tamilnadu

டிக்கெட் இல்லாமல் 683 பேர் பயணம்.. ஒரே நாளில் 3.4 லட்சம் அபராதம் வசூல்: ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி!

வட மாநிலங்களில் இருந்து சென்னை மற்றும் சென்னை வழியாக வந்து செல்லும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பலர் பயணிப்பதாக ரயில்வே துறைக்குத் தொடர் புகார்கள் வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வழியாகச் சென்ற இரண்டு ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

பெங்களூரு - தனப்பூர் இடையே இயக்கப்படும் சங்கமித்ரா விரைவு ரயிலில் சோதனை செய்தனர். அப்போது பலர் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பலர் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பீகாரிலிருந்து சென்னை வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் ரப்தி சகார் விரைவு ரயிலிலும் சோதனை செய்யப்பட்டது. அப்போது உரிய டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ. 51,540 வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ரயில்களில் மட்டும் 683 பேர் டிக்கெட் இன்றி பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.3.38 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களிலிருந்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களே டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read: தாராள பிரபுவாக மாறிய ATM.. ரூ.500 கேட்டவர்களுக்கு ரூ.2500 அள்ளிக்கொடுத்த வங்கி - எங்கு தெரியுமா?