Tamilnadu

144 தடை.. இஸ்லாமியர்கள் மீது வன்முறை : “கலவரங்களுக்குப் பின்னால் பா.ஜ.க.வின் சதி உள்ளது” - மம்தா ஆவேசம்!

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்கள், மத வெறுப்பு பேச்சுக்களை பா.ஜ.க தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ந்து பேசிவருகின்றனர். இந்நிலையில் அண்மையில், பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் நாயகம் குறித்துப் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் இந்த மத வெறுப்பு பேச்சுக்கு அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் இந்திய நாட்டிற்குப் பெரிய அவமதிப்பாகிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதேபோல் அரபு நாடுகளும் நபிகள் குறித்துப் பேசிய நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் நுபுர் சர்மாவைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நேற்றைய தினம் டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் இன்று தொழுகையை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், கர்நாடகா, தெலங்கானா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியாக நடந்தப் போராட்டத்தில் இந்துத்வா மற்றும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையை நிகழ்த்தியுள்ளனர்.

மேலும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது கொடூரமான அடுக்குமுறையை ஆம்மாநில அரசுகள் காவல்துறையினர் மூலம் ஏவி வருகிறது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதில் ஜார்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறிய நிலையில், பதற்றமிக்க பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இது குறித்து மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இதற்கு முன்னரும் இதனைக் கூறி இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக வன்முறை காரணமாக ஹவுராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன.

பா.ஜ.க.வினர் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று காட்டமாக கூறியுள்ளார்.

Also Read: நாடு முழுவதும் வெடித்த இஸ்லாமியர்கள் போராட்டம்.. நுபுர் சர்மா-வுக்கு எதிராக வலுக்கும் குரல்!