Tamilnadu

UPSC தேர்வில் குறையும் தமிழக மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கை.. காரணம் என்ன?: புறக்கணிக்கப்படுகிறதா தமிழ்நாடு

2021ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளை அண்மையில் மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டது. இதில் கோவையைச் சேர்ந்த சுவாதி ஸ்ரீ இந்திய அளவில் 42வது இடமும் தமிழ்நாட்டு அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். மேலும், யு.பி.எஸ்.சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 27 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டிலிருந்து யு.பி.எஸ்.சி தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதும் புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

2013ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் 150 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 118, 82,78,42,45,60,36 என தேர்ச்சி எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021ம் ஆண்டில் 27 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக, அ.தி.மு.க அரசின் 10 ஆண்டு ஆட்சியில்தான் யு.பி.எஸ்.சி தேர்ச்சி விகிதம் கடுமையாகச் சரித்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறைவதற்கான காரணத்தை அ.தி.மு.க அரசு உரிய முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்காததே இந்த நிலைக்குக் காரணம் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறனர்.

இந்நிலையில் ஆட்சிக்கு வந்த, தி.மு.க அரசு யு.பி.எஸ்.சி தேர்ச்சி எண்ணிக்கையை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அகில இந்தியக் குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய தேர்வர்களுக்குப் பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குக் கட்டணம் ஏதும் இல்லாமல் யு.பி.ஸ்.சி மாதிரி ஆளுமை தேர்வை நடந்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆன்லைன் ரம்மி குறித்த அவசர சட்டம் - ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு : முதலமைச்சர் அதிரடி உத்தரவு !