Tamilnadu

729 மில்லி தங்கத்தில் கலைஞரின் கம்பீர உருவம்.. சிதம்பரம் பொற்கொல்லர் அசத்தல்!

முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவித்திருந்தார். இதையடுத்து கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா நாளை தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்துள்ளார்.

இந்நிலையில், பொற்கொல்லர் ஒருவர் கலைஞரின் உருவத்தை தங்கத்தில் வடிவமைத்துள்ளார். சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். பொற்கொல்லரான இவர் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி 729 மில்லி தங்கத்தில் மூன்று சென்டிமீட்டர் உயரம், மூன்று சென்டிமீட்டர் அகலம் அளவில் கலைஞரின் உருவத்தை வடிவமைத்துள்ளார்

மேலும் 630 மில்லி தங்கத்தில் கலைஞரின், உருவத்தையும் 99 மில்லி தங்கத்தில் கலைஞர் என்ற கருப்பு சிவப்பு எழுத்தில் பெயரையும் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே குறைந்த அளவு தங்கத்தில் இந்திய பாராளுமன்றம், தமிழக சட்டசபை, நடராஜர் கோவில், தாஜ்மஹால் உள்பட பலவற்றை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “தஞ்சைத் தரணியில் தாய்மடி தவழ்ந்தேன்..” : தி.மு.க உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!