Tamilnadu
தாய், 2 மகன்கள் அடித்துக்கொலை.. சைக்கிளில் தப்பிய கொலைக்காரனுக்கு நேர்ந்த அவலம் : போலிஸ் விசாரணை!
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் தனது மகன்கள் தர்னீஷ் மற்றும் நித்தீஷ் ஆகிய இருவருடன், திருப்பூர் மாவட்டம் நெருப்பரிச்சல் என்ற பகுதி அருகே வீடு எடுத்துத் தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த மே 23ம் தேதி முத்துமாரி வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் வாயில் பகுதியில் ரத்தக்கரை தென்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளேச் சென்று பார்த்தபோது, முத்துமாரி மற்றும் அவரது இரண்டு மகன்களும் ரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்துள்ளனர்.
இதனையடுத்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மூன்று பேரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் நடத்தியதில், அந்த பெண்ணுடன் தங்கியிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஆண் நண்பர் ஒருவர் கொலை நடந்த நாளில் இருந்து வரவில்லை என்றும் இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.
மேலும் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் குஜராத் மாநிலம் போர்பந்தர் பகுயைச் சேர்ந்த கோபால் என்ற கார்த்தி என்பது தெரியவந்தது. மேலும் படியூர் பகுதியில் கோபால் சைக்கிளில் சுற்றித்திருந்ததாக போலிஸாருக்கு தகவக் கிடைத்தது.
இதனையடுத்து போலிஸார் கண்காணித்து தேடி வந்த நிலையில்,, காங்கேயம் அருகே படியூர் பகுதி அருகே உள்ள தண்ணீர் இல்லாத 80 அடி கிணற்றில் ஒருவர் சைக்கிளுடன் உயிரிழந்துக் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், கிணற்றுக்குள் இருந்த நபரையும் சைக்கிளையும் மீட்டனர்.
பின்னர் போலிஸார் உயிரிழந்து கிடப்பது வடமாநிலத்தைச் சேர்ந்த தேடப்பட்ட நபர் என்பதை போலிஸார் உறுதி செய்தனர். மேலும் போலிஸார் இது விபத்ததா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்துவிட்டார்களா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!