Tamilnadu
ஒரே ஆண்டில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற முதலமைச்சர் பட்டியலில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!
ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த 5 மாநிலங்களின் முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள்தான் அதிகப்படியான மக்களின் ஆதரவையும் திருப்தியையும் பெற்றுள்ளதாக சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு, புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மாநிலங்களில் புதிய அரசுகள் ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் முதலமைச்சர்களின் செயல்பாடுகள் மீது அந்தந்த மாநில மக்கள் எந்தளவிற்கு திருப்தி தெரிவிக்கிறார்கள் என பிரபல சி வோட்டர்ஸ் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான், தமது செயல்பாடுகளால் அதிகப்படியான மக்களின் ஆதரவை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு குறித்து கிட்டத்தட்ட 85 சதவிகித தமிழ்நாட்டு மக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 77.7 சதவிகிதத்தினரின் ஆதரவுடன் 2ம் இடத்திலும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 72 சதவிகித ஆதரவுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்த வரிசையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 61 சதவிகித ஆதரவுடன் கடைசி இடத்தில் உள்ளதாக சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!