Tamilnadu

ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து.. 300 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் - மீட்பு பணி தீவிரம்!

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடை மதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் நேற்றிரவு கல்களை ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென மிகப்பெரிய பாறை உருண்டு பள்ளத்துக்குள் கல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.

இதில் 2 லாாிகள், 3 கிட்டாச்சி உள்ளே மாட்டிக் கொண்டன லாரி டிரைவர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் கிட்டாச்சி, ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர். பின்னர் தகவல் அறிந்து நாங்குநேரி பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

ஆனால், இரவு நேரம் என்பதினால் சம்பவ இடத்தில் வெளிச்சம் இல்லாமல் கடும் இருட்டாக இருந்ததாலும், மேலும் மழை பெய்து வருவதாலும், சுமார் 300 அடி பள்ளம் என்பதினாலும் மீட்பு பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டு பேர் பத்திரமாக மீட்பப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் மீதமிருப்பவர்களை மீட்பதற்கு, காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் ராட்சத கிரைன் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அதன் பின் தான் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 4 பேர் உயிருக்கு போராடி வரும் சம்பவம் நெல்லையில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “லிப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பரிதாப பலி” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் தலைமறைவு!