Tamilnadu

700 அடி பள்ளத்தில் விழவேண்டிய வேன் விபத்திலிருந்து தப்பியது எப்படி? கோத்தகிரி மலைப்பாதையில் நடந்தது என்ன?

700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாக வேண்டிய வாகனத்தை ஓட்டுநரின் சாதுரியத்தால் வலது புறம் திருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகைக்கு ஹைதராபாத்திலிருந்து குடும்பத்துடன் 12 பேர் சுற்றுலா வந்துள்ளனர். நேற்றைய தினம் உதகைக்கு வந்து தங்களது சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கொட்டக்கொம்பை பகுதியில் வாகனத்தின் க்ரௌன் பழுதாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. குறிப்பாக 700 அடி பெரும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாக வேண்டிய வாகனத்தை ஓட்டுநரின் சாதுரியத்தால் வலதுபுற தடுப்பில் திருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வாகனத்தில் பயணித்த சிறுவர் உட்பட மூவருக்கு பலத்த காயமடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இவ்விபத்து குறித்து கோத்தகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Also Read: கோழிக்கறியில் நெளிந்த புழு.. கடைக்காரரின் பேச்சால் ஷாக்கான வாடிக்கையாளர்.. புதுவையில் பரபரப்பு!