Tamilnadu
“திருட்டு பிரியாணி வேணாம்னா” - ரம்ஜான் நாளில் பல்பு வாங்கிய பா.ஜ.க பிரமுகர்!
ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை இன்று இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். காலையிலேயே புது உடைகளை அணிந்து மசூதிக்குச் சென்று சிறப்புத் தொழுகையை முடித்து, அங்கிருந்தவர்களிடம் கட்டிப்பிடித்து தங்களின் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
இதையடுத்து ரமலான் பண்டிகையில் மிகவும் முக்கியமான பிரியாணியை தங்கள் வீட்டில் சமைத்து, அதை வேறு மதங்களைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்குக் கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியில் ரமலான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நமக்குத் தெரிந்த இஸ்லாமிய நண்பர்களிடமும் நாமும் ராமலான் பண்டிகை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே உரிமையுடன் பிரியாணி கேட்டு இன்று ரமலான் பிரியாணியை சுவைத்து நமக்கான சகோதர பாசத்தை வெளிப்படுத்தியிருப்போம்.
அந்த வகையில், ஜேம்ஸ் ஸ்டான்லி என்ற இளைஞர் ஒருவர் தனது ட்விட்டரில், "பாய் கடைசியாக கேக்குறேன். பிரியாணி கிடைக்குமா? இல்ல மிஸ்டுகால் குடுத்து ஜீ கட்சியில சேரவா" என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த பா.ஜ.கவை சேர்ந்தவர், "தம்பி நீ சேர வேண்டாம். நானே உனக்கு பிரியாணி வாங்கி தறேன்" என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அந்த இளைஞர், "கடையில அண்டாவை தூக்கிட்டு வந்து தர பிரியாணி வேண்டாம்னா. காசு கொடுத்து வாங்கிக்கிறேன்" என கிண்டலடித்துள்ளார்.
தற்போது இவரின் இந்த பதிவு சமூகவலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. "சேத்துலயும் அடி வாங்கியாச்சு...சோத்துலயும் அடி வாங்கியாச்சு" என நெட்டிசன்கள் பலவிதமாக கிண்டலடித்து வருகின்றனர். வடிவேல் பாணியில் நானும் ஜெயிலுக்கு போரன் என்ற கணக்கா வம்படியாக வந்து மாட்டிக் கொண்டு நெட்டிசன்ககளிடம் பல்பு வாங்கிய பா.ஜ.க பிரமுகர்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!