Tamilnadu
“சமஸ்கிருத உறுதிமொழி - மருத்துவக்கல்லூரி டீன் மீது நடவடிக்கை” : அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர் மா.சு!
“மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில், அக்கல்லூரியின் டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்ய அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவருக்கும் இப்போகிரேடிக் உறுதிமொழி (Hippocratic Oath) காலம் காலம்காலமாக அனைத்து மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தொடங்கிய காலத்திலிருந்து பின்பற்றி வரப்படுகிறது.
அரசு மதுரை மருத்துவக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழி (Hippocratic Oath) பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். இதன் பொருட்டு மதுரை மருத்துவக்கல்லூரி டீன் Dr. A.இரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார்.
மேலும், தன்னிச்சையாக விதிமுறையை மீறி இப்போகிரேடிக் உறுதிமொழி (Hippocratic Oath) பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததிற்கு துறை ரீதியாக விசராணை நடத்த மருத்துவக்கல்வி இயக்குநர் மருநாரயணபாபு அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் உத்திரவு இட்டுள்ளார்.
மேலும், அனைத்து மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் இனிவரும் காலங்களில் அனைத்து துறை தலைவர்களும் எப்பொழுதும் பின்பற்றப்படும் இப்போகிரேடிக் உறுதிமொழி (Hippocratic Oath) இதையே தவறாது கடைபிடிக்க மருத்துவக்கல்வி இயக்குநர் மூலம் சுற்றிக்கை வாயிலாக அறிவுறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!