Tamilnadu

ரேஸ் பைக்குகளில் ஸ்லைடிங் நம்பர் பிளேட்.. டிராஃபிக் போலிஸிடம் சிக்கிய விற்பனையாளர்கள்: சென்னையில் அதிரடி!

பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்பனை செய்த கடை உரிமையாளர்களை போக்குவரத்து போலிஸார் கைது செய்தனர்.

சென்னை போக்குவரத்து காவல்துறை சிறப்பு வாகன தணிக்கை ஒன்றை நடத்தி விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை மட்டும் சோதனை நடத்தினர். அதில் சுமார் 100 வாகன ஓட்டிகள் sliding number plate என்று சொல்லப்படும் நம்பர் பிளேட்டை மறைத்து வைக்கும் படியான வகையில் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 100 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் எந்தெந்த பைக் கடைகளில் இது போன்ற நம்பர் பிளேட்டுகள் மாற்றி தரப்படுகிறது என்பது போக்குவரத்து காவல்துறை விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் சென்னை அண்ணாசாலை கதீட்ரல் கார்டன் சாலையில் உள்ள "சென்னை பைக்கர்ஸ்" என்ற கடையிலும், ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள "நியூ மெகா ஸ்டிக்கர்ஸ்" ஆகிய 2 கடைகளிலும் ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Also Read: Interview-க்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்.. வசமாக சிக்கிய பெயின்ட் நிறுவன ஓனர்.. மாதவரம் போலிஸ் அதிரடி!

இதனையடுத்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிஸார் கடைகளில் சோதனை நடத்தி 32 ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறி சட்டவிரோதமாக ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்ததாக 2 கடைகளின் உரிமையாளர்களான பிரவீன்குமார், சரத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

அந்த இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Also Read: வீடு புகுந்து 18 சவரன் நகையை அபேஸ் செய்த மேல்மாடி வளர்மதி.. புதுச்சேரியில் நடந்த துணிகரச் செயல்!