Tamilnadu
சென்னை ரயில் நிலையத்தில் தடம் புரண்ட மின்சார ரயில்: 9 மணிநேரம் போராடி ரயில் பெட்டிகளை மீட்டது எப்படி?
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை எண் ஒன்றில் எடுத்து வரப்பட்ட பயணிகள் மின்சார ரயில் சரியாக நேற்று (ஏப்.,24) மாலை 4.25 மணி அளவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
நல்வாய்ப்பாக பணிமனையில் இருந்து எடுத்துவரப்பட்ட ரயில் என்பதால் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை, விடுமுறை தினம் என்பதால் நடைமேடையில் பொதுமக்கள் கூட்டம் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறது. மேலும் 11 பணியாளர்கள் அந்த நடைமேடையில் தூய்மைப் பணி மேற்கொண்டு வந்துள்ளனர்.
உடனடியாக நடைமேடையில் இருந்து விலகும்படி ஓட்டுநர் சத்தமிட்டதைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களும் விலகிக் கொண்டுள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமுமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே காவல்துறை எஸ்.பி.இளங்கோ விபத்துக்குள்ளான ரயில் முழுவதும் காவல் துறையினர் மூலம் பயணிகளின் உடைமைகள் எதுவும் உள்ளதா என்பதை பரிசோதித்தோம் என்றும் விபத்திற்கான காரணம் பிரேக் பிடிக்காததே என கூறினார். மேலும் ரயிலை இயக்கி வந்த ஓட்டுனர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.
பொதுமக்கள் யாரும் விபத்திற்குள்ளான நடைமேடையில் வராத வண்ணம் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப குழுவினர் விபத்திற்குள்ளான ரயிலை 9 மணி நேரம் போராடி மீட்டு நடைமேடையில் நிறுத்தினர்.
கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான முதல் பெட்டியை மீட்க மட்டும் 5 மணிநேரத்திற்கும் மேல் ஆனது. இதர பெட்டிகளை அகற்றி ஏற்கனவே பணிமனைக்கு ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து விபத்துக் காலங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு இன்ஜின் மூலம் விபத்துக்குள்ளான ரயிலை மீட்டனர்.
தடம்புரண்ட ரயில் மீட்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கோட்ட மேலாளர் கணேஷ், எதிர்பாராத விதமாக நேற்று இந்த விபத்து நடைபெற்றதாகவும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். தடம்புரண்ட ரயில் முற்றிலுமாக மீட்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும் இந்த விபத்தின் சேத மதிப்பு இதன் பிறகுதான் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அது குறித்தான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த நிலையில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் அதிவேகமாக ரயிலை இயக்கி நடைமேடையில் விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் புகாரின் பேரில் எடுக்கப்பட்டிருக்கிறது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!